Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 மார்ச் 22 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவருக்கும் உள்ள பொதுவானதொரு பிரச்சினை முடி உதிர்வுதான். நம்முடைய தோற்றத்தை மெருகூட்டி காட்டுவதில் தலைமுடி பிரதான இடத்தை வகிக்கின்றது. பொதுவாகப் பெண்களுக்கு அதிகமானளவு கவர்ச்சியை கொடுக்கக்கூடியது அவர்களது கூந்தல் என்றால் மிகையாகாது. அந்தவகையில் அனைவரும் மிக அதிகளவில் கவனம் செலுத்தி பராமரித்து வரும் தலைமுடி உதிர்வதை யாரும் விரும்புவதில்லை. இப்பிரச்சினைக்குத் தீர்வினைத்தேடி அழைபவர்கள், எளிமையான வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றுவதினால், சிறந்தத் தீர்வினைப் பெற்றுகொள்ள முடியும்.
கொத்து வேப்பிலையை எடுத்து, இரண்டு லீற்றர் தண்ணீரில் போட்டு, மூடி கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை அப்படியே இறக்கி வைத்து, மறுநாள் காலையில் வேப்பிலைகளை எடுத்து விட்டு, அந்தத் தண்ணீரில் கூந்தலை அலச வேண்டும். வாரம் ஒரு முறை இப்படி செய்தாலே போதும், முடி உதிர்வது தடுத்து நிறுத்தப்படும்.
அதேபோன்று வெந்தயம், குன்றுமணி இரண்டையும் பொடி செய்து, ஒரு வாரம் தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, தினமும் தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். அல்லது அவுரி, கரிசாலை, கறிவேப்பிலை மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து, தினமும் மூன்று வேளைகள் 5 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், தலைமுடி நன்கு வளரும். முடி உதிர்தல் பிரச்சினை குறையும்.
மேலும் கற்றாழையின் சதைப்பகுதியை துண்டுதுண்டாக நறுக்கி, இதன் சம அளவிற்கு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை சேர்த்து சுண்ட காய்ச்ச வேண்டும். பிறகு இந்த தைலத்தை தண்ணீர் படாமல் பாட்டிலில் சேகரித்து தினந்தோறும் தடவி வந்தால் முடி உதிர்வது நிற்பதோடு தலை முடி நன்றாக வளரும்.
பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, செம்பருத்தி இலை, வெட்டிவேர், அதிமதுரம், நெல்லிக்காய், கடுக்காய் போன்றவற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து எண்ணெய் காய்ச்சலாம். இந்த எண்ணெயை முடிக் கால்களில் படுவதுபோல் தேய்க்க வேண்டும். 20 நிமிடம் வரை விடலாம். பொடுகு அதிகம் உள்ளவர்கள் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காயை புளிக்காத மோருடன் கலந்து தேய்த்துக் குளிக்கலாம்.
இப்படி செய்து வர, முடி உதிர்தல் பிரச்சினைகளிலிருந்து சிறந்தத் தீர்வினைப் பெற்றுகொள்வதோடு, தலைமுடி வேகமாக வளர்வதினையும் காணலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago