2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

ஆரோக்கியமான கூந்தலுக்கு நெல்லிக்காய்

Editorial   / 2017 ஒக்டோபர் 01 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாதாரணமாகவே நெல்லிக்காய் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் பெரிதும் உதவியாக உள்ளது. பெரும்பாலும் ஆயுர்வேதத்தில் தான் நெல்லிக்காயை அதிகம் பயன்படுத்துவார்கள்.

ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இவை உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வைக் கொடுத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அத்தகைய நெல்லிக்காயில் உடல் நன்மைகள் மட்டுமின்றி, அழகு நன்மைகளும் அதிகம் நிறைந்துள்ளது.

தற்போது நிறைய மக்கள் ஆம்லா/நெல்லிக்காய் எண்ணெய், நெல்லிக்காய் இருக்கும் எண்ணெய் வகைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பது, கூந்தல் உதிர்தலை தடுப்பது, அடர்த்தியான கூந்தலை வளரச் செய்வது என்ற பலனைத் தருகின்றன.

மேலும் நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால், சருமம் நன்கு பொலிவோடு அழகாக இருக்கும். ஏனெனில் இவை உடலில் உள்ள டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றிவிடும் என்பதால் தான். அத்தகைய நெல்லிக்காயை கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தினால் மிகச் சிறந்த பலன்கள் உண்டு.

கூந்தல் உதிர்தல் தினமும் நெல்லிக்காய் எண்ணெய் கொண்டு, தலைக்கு 45 நிமிடம் மசாஜ் செய்து, பின் தலைக்கு குளித்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X