2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

மாசிக்காய்

Kogilavani   / 2014 மே 04 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாசிக்காயானது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஓர் அற்புதமான மருந்தாகும். இக்காய் மற்ற மரங்களின் காயைப் போல் பூவிலிருந்து காயாகாது. இந்த மரத்தின் கிளைகளில் ஒருவித பூச்சிகள் துளையிடும் போது கிளையிலிருந்து பால் வடிந்து அது உறைந்து திரண்டு கெட்டிப்படும். இதுவே மாசிக்காயாகும்.

பொதுவாக மாசிக் காய்களைச் சேகரிக்கும்போது அதிலுள்ள பூச்சிகள் வெளியே வருவதற்கு முன்பே சேகரிப்பதுதான் சிறந்த மருத்துவப்பயன் உடையதாக இருக்கும்.

மாசிக்காயைப் பொடி செய்து வெந்நீரில் போட்டு பத்து நிமிடம் சென்ற பின்னர் அந்நீரை வடிகட்டி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும். மாசிக்காயை பொடி செய்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டால், பெண்களுக்கு மாதவிடாயின் போது, ஏற்படும் அதிக ரத்தப் போக்கினை கட்டுப்படுத்தும்.

மாசிக் காயைப் பொடித்து 50 கிராம் எடுத்து 800 மில்லிலீற்றர் நீருடன் கலந்து பத்து நிமிடம் நன்கு காய்ச்சி பின்னர் வடிகட்டி அதனை 30 மில்லிலீற்றர் முதல் 60 மில்லிலீற்றர்  வீதம் பருகி வர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலும் குணமாகும்.

பொதுவாக குழந்தைகளுக்கு உரைத்துக் கொடுக்கப்படும் உரை மருந்து வகைகளில் மாசிக்காயும் ஒன்றாகும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பச்சையாக பேதியாகும். இதற்கு புது மண்சட்டியை வாங்கி வந்து கவிழ்த்துப் போட்டு அச்சட்டியின் மேல் மாசிக்காயை தாய்ப் பால் விட்டு இழைத்து குழந்தையின் நாவில் தடவி வர பேதி குணமடையும்.

மாசிக்காயிலிருந்து ஒருவகை மஞ்சளும், வெண்மையும் கலந்த நிறம் உடையதாய், துவர்ப்புச்சுவை கொண்டதுமான உப்பை எடுக்கிறார்கள். இது சிறந்த துவர்ப்பியாகவும், ரத்தப்போக்கை நிறுத்துவதற்கும் பயன்படுகிறது. நாள்பட்ட தேக நோய்களுக்கு மாசிக்காயை குடிநீரிட்டு 30 மில்லிலீற்றர் முதல் 60 மில்லிலீற்றர் வீதம் அருந்திவர பலன் கிடைக்கும்.

சித்த மருத்துவத்திலும் மிக முக்கியமான பங்கினை பெறுவதை அனுபவமிக்க சித்த மருத்துவர்களின் குறிப்புகளை படிக்கும் போது நன்கு உணரலாம். சித்த மருத்துவத்தில் மாசிக்காய் குடிநீர் ஒரு சிறந்த மருந்தாகும். மகளிர் மருத்துவத்தில் இந்த மாசிக்காய் மருந்து பெரும் நன்மையினை தரக்கூடியதை நமது முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்தனர்.

விஞ்ஞானம் முன்னேறாத அந்த காலக் கட்டத்தில் கூடு மாசிக்காய்தான் பெண்களுக்கு அரும் மருந்தாக இருந்து வந்ததுள்ளது.
(அப்புக் குட்டி மருத்துவம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X