2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

பிரசவத்திற்கு முன்பும் அதற்கு பின்னரும் செய்ய வேண்டிய, செய்ய கூடாத விடயங்கள்

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகின் மிகவும் பெரிய செல்வம் குழந்தை செல்வம் தான். அந்த செல்வத்திற்காக தவம் இருப்பவர்களுக்கு அதன் அருமையும் பெருமையும் தவிப்பும் உணர்வு பூர்வமா தெரியும். ஆமாம் அந்த வகையில் தாய்மை பெண்களுக்கு கிடைத்த ஒரு பெரிய பொக்கிஷம் எனலாம். எனவே தான் தன் வயிற்றில் ஒரு குழந்தை உருவாகியதும் அதற்கு வற்றாத பாசத்தை காட்ட ஆரம்பித்து விடுகின்றார்கள். 
 
உங்களுக்கு தெரியுமா? கருத்தரித்த பன்னிரெண்டு வாரங்களின் பின்னர் குழந்தையின் உடல் பாகங்கள் வேகமாக வளர ஆரம்பிக்கும். இக்கட்டத்தை ஓர்கனோஜெனிஸ் (Organogesis) என்று சொல்வார்கள். இக்கட்டத்தில் கருத்தரித்த பெண்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்வது அத்தியாவசியமான ஒன்றாகும்.
 
இன்று பெரும்பாலான பிரசவங்கள் மருத்துவமனைகளிலேயே தான் நடக்கின்றன. வீட்டிலேயே நடப்பது மிகவும் குறைவு. ஆனாலும் தகுந்த பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளுடன் வீட்டிலேயே குழந்தையை பெற்றுக் கொள்வது தான் சிறந்தது என அண்மைகால ஆய்வுகள் சொல்கின்றனவாம். இன்று வெளிநாடுகளில் உள்ள பெரும்பாலான பெண்கள் தாம் வீட்டிலேயே தான் குழந்தையை பிரசவிக்க விரும்புகிறார்களாம்.
 
அந்தவகையில் நாம் இன்று பிரசவக் காலத்தில் ஒரு பெண் பிரசவத்திற்கு முன்பும் அதற்கு பின்பும் செய்யக்கூடிய விடயங்கள் எவை, செய்யக் கூடாத விடயங்கள் எவை என்பதை தெரிந்து கொள்வோம். 
முதலில் செய்ய கூடிய விடயங்களைப் பற்றிப் பார்ப்போம்.
பிரசவக் காலத்தில் நடப்பது நல்லதொரு உடற்பயிற்சியாகும். 
பிரசவ வலியை போக்கி கொள்வதற்காக தேவையில்லாத மருந்துகளை உட்கொள்வதை விட, வலியை பொறுத்துக்கொள்ள பழகி கொள்வது மிகவும் நல்லது.
பிறந்தவுடனேயே குழந்தையை தூக்கி வைத்துக்கொள்ள வேண்டுமென கேளுங்கள். இதனால் மிக சீக்கிரமாகவே உங்களுக்கும் குழந்தைக்குமான பந்தம் தொடங்கி விடும்.
உங்கள் குழந்தை உங்களுடனேயே இருக்க வேண்டும் என வற்புறுத்துங்கள்.
பிரசவம் நடந்து இரண்டு மூன்று நாட்களுக்குள்ளேயே மருத்துவமனையை விட்டு வெளியேறி விடுங்கள்.
உங்கள் கணவரை பெரும்பாலும் உங்களுடனேயே இருக்கச் சொல்லுங்கள்.
முடியுமானால் உதவிக்கு ஒருவரை வைத்துக் கொள்ளுங்கள்.
சரி... இனி, செய்ய கூடாத விடயங்கள் எவை என்பதை பற்றிப் பார்ப்போம்.
எனிமா உட்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
தொடர்ந்தும் படுக்கையிலேயே படுத்துக் கொண்டிருக்காதீர்கள்.
துடிப்பதை நிறுத்தும் வரைக்கும் தொப்புள் கொடியை அறுக்க அனுமதிக்காதீர்கள்.
சிரை வழியாக திரவம் ஏற்றுவதை வழக்கமாக அனுமதிக்காதீர்கள்.
குழந்தையை வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டாம்.
தாய்ப் பாலை தவிர வேறு எதனையும் குழந்தைக்கு கொடுக்காதீர்கள்.
 
குழந்தையை பிரசவிக்கும் முன்னரும் பிரசவித்த பின்னரும் மேற்கூறப்பட்ட ஆலோசனைகளையும் கடைபிடித்தீர்கள் என்றால் உங்களின் பிரசவக்காலத்திலும் அதற்கு பின்னரும் கூட நீங்களும் உங்களது குழந்தையும் ஆரோக்கியத்துடனும் ஆனந்தத்துடனும் இருக்கலாம்.
 
-தம்பி

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X