2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

நீங்களும் ஆரோக்கியமாக முதுமையடைய வேண்டுமா?

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


எல்லோருடைய வாழ்க்கையிலும் முதுமை என்பது தவிர்க்க முடியாத ஓர் அத்தியாயமாகும். அதனை முழுமையாக நீக்கி விடவோ, ஆயுளை நாம் நினைத்தப்படி அதிகரித்துக் கொள்ளவோ முடியாது. ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையொன்றை நாம் தொடர்ச்சியாக கடைபிடிக்கும் பட்சத்தில் முதுமையை ஆரோக்கியமான முறையில் தழுவிக் கொள்ளலாம். 
 
அவ்வாறு ஆரோக்கியமாக நீங்களும் முதுமையை தழுவிக் கொள்ள என்ன செய்யலாம் என அங்கலாய்த்தது போதும். பின்வரும் முறைகளை வாழ்க்கையில் தினமும் கடை பிடியுங்கள். நல்ல பலனை வெகு சீக்கிரமே பெற்றுக் கொள்ளலாம்.
சமச்சீரான உணவுகளை சாப்பிடுங்கள். அதில் பழங்களையும், காய்கறிகளையும் நிறைவாக சேர்த்துக் கொண்டால் பலன் அதிகம் கிடைக்கும்.
உங்களால் தினமும் செய்ய கூடிய மாதிரியான உடற்பயிற்சிகளை தொடர்ந்தும் செய்யுங்கள். ஏதேனும் நோய் ஒன்றுக்கு இலக்கானவர்களாக இருந்தால் கட்டாயம் வைத்திய ஆலோசனையுடன் உடற்பயிற்சியை செய்வது நல்லது.
குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தடவை ஒரு வைத்தியரிடம் உங்கள் உடலை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
புகைப்பிடிக்கும் பழக்கத்தை கட்டாயம் தவிர்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறான பழக்கம் உங்களுக்கு இருந்தால் உடனடியாக அதனை நிறுத்திக் கொள்ளுங்கள்.
குடும்பத்தினர், உறவுகள், சுற்றத்தார் மற்றும் நண்பர்களுடன் தொடர்ந்தும் ஆராக்கியமான தொடர்பை வைத்துக் கொள்ளுங்கள்.
அன்றாடம் நீங்கள் செய்யும் வேலைகளை உற்சாகத்துடனும், விருப்பத்துடனும் செய்யுங்கள். முடிந்தளவு யாருடைய துணையும் இன்றி உங்களது சொந்த தேவைகளை நீங்களே செய்து கொள்ளுங்கள்.
மது பழக்கம் இருந்தாள் அது ஒரு எல்லையை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மது அருந்தி விட்டு வாகனம் செலுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்.
ஆக்கப்பூர்வமான எண்ணங்களோடு வாழ்வதுடன், வீணான யோசனைகள், கவலைகளுக்கு ஆளாகாமல் வாழ்க்கையை முடிந்தளவு மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
 
ஒரே நாளில் நாம் பழகிய சில பழக்க வழக்கங்களை மாற்றி கொள்வது சிரமமான காரியம் தான். எனவே சிறு பராயத்தில் இருந்தே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பழகி கொள்வதுடன், எமது எதிர்கால சந்ததியினருக்கும் அப்பழக்க வழக்கத்தை பழக்கி விடுவது சிறந்ததொரு பண்பாகும். 
 
முதுமையை அடைவது என்பது வாழ்க்கையின் படிப்படியான வீழ்ச்சியல்ல. அதனை வெற்றிகரமாக வாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டுமாயின் காலப்போக்கில் உங்கள் உடலில் என்னனென்ன மாற்றங்கள் நிகழும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 
 
அவ்வாறு அவற்றை தெரிந்து வைத்துக் கொள்வதுடன் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளுடன், வாழ்க்கைக்கு வழி வகுக்கும் ஆரோக்கியமான வழிமுறைகளை தொடர்ந்தும் கடைபிடிப்பீர்களேயானால் நீங்கள் முதுமையை உடல் நலத்துடன் சிறப்பாக அடைய முடியும்.
 
-தம்பி

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X