2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

12 வகையான புற்றுநோய்களை குணப்படுத்தும் முள் சீத்தாப்பழம்

A.P.Mathan   / 2014 மார்ச் 16 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகை உலுக்கி கொண்டிருக்கும் பல்வேறு நோய்களில் புற்றுநோயும் ஒன்று. எப்படிப்பட்ட தைரியசாலியையும் ஒரு கணம் பதபதக்க வைத்து விடும் ஒரு நோயாகத்தான் இது காணப்படுகின்றது.

இனிமேலும் அந்நோயைக் கண்டு நடுங்க வேண்டிய தேவை உங்களுக்கு இல்லை. அதற்காக தொகை தொகையாக பணத்தினை வாரி செலவு செய்ய வேண்டிய அவசியமும் இனி இல்லை.
ஆமாம், புற்று நோயின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட நிiலையை குணப்படுத்திக் கொள்ள இப்போது இயற்கை நமக்கு மருந்தொன்றை கொடையாக கொடுத்திருக்கின்றது. முள் சீத்தாப்பழத்தை பற்றி தெரியாதவர்கள் பெரும்பாலும் யாரும் இருக்க முடியாது. புற்று நோயிக்கு நாம் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளை விடவும் சுமார் பத்தாயிரம் மடங்கு பலனை நாம் முள் சீத்தாப்பழத்தின் மூலம் பெற்றுக் கொள்ள கூடியதாக இருக்கின்றது.

வீட்டுத்தோட்டங்களிலும், பழக்கடைகளிலும் பெரிதும் கவனிப்பு இன்றி கிடக்கும் முள் சீத்தாப்பழத்திற்கா இத்தகைய தன்மை இருக்கின்றது என உங்களுக்கு வியப்பாக இருக்கின்றதா? மேற்புறம் முள்போன்ற தோற்றத்தில் காணப்படும் இப்பழத்தின் உட்பகுதி மென்மையான சதைகளால் ஆனது. புற்று நோய் உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் அந்நோய் இருந்த இடம் தெரியாமல் போய் விடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தென் அமெரிக்காவில் உள்ள அமேசன் காடுகளை தாயகமாக கொண்ட முள் சீத்தாப்பழம், உடம்பில் புதிய செல்களை உற்பத்தி செய்து, நோயை ஏற்படுத்தும் செல்களை அழிக்கும் திறன் கொண்டதாகும். அதிகமான ஊட்டச்சத்தினைக் கொண்டிருக்கும் இப்பழத்தில் காபோஹைதரட், பிரக்டோஸ் மற்றும் விட்டமின் சி என்பன நிறைந்து காணப்படுகின்றன.

புற்றுநோயை குணப்படுத்த நாம் எடுத்துக் கொள்ளும் சில சிகிச்சை முறைகள் எமக்கு சில நேரங்களில் ஒரு சில பக்க விளைவுகளை தோற்றுவிக்கும் தன்மை கொண்டவை. உதாரணமாக ஹீமோ தெரப்பி என்ற சிகிச்சை முறையால் முடி கொட்டுதல், உடல் மெலிதல், வாந்தி வருதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது.

ஆனால் அந்த சிகிச்சை முறையின் மூலம் கிடைக்கும் பலன்களை விடவும் எவ்விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத அதேவேளை சுமார் 10,000 மடங்கு பலனை தரும் ஆற்றல் முள் சீத்தாப்பழத்திற்கு இருக்கின்றது.

கிட்டத்தட்ட 12 வகையான புற்றுநோய்களை குணப்படுத்தும் வல்லமையும் முள் சீத்தாப்பழத்திற்கு இருக்கின்றது. அத்துடன் புற்றுநோயால் உருவாகும் கட்டிகளை கரைத்தல், கற்பப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் என்பனவற்றை குணப்படுத்துவதுடன், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் போன்ற உடலுறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்களையும் தடுக்கும் ஆற்றலும் முள் சீத்தாப்பழத்திற்கு இருக்கின்றது.


வெறுமனே பழங்கள் மட்டுமன்றி அதன் இலைகளிலும் மருத்துவ குணம் இருப்பதாக அறிய முடிகின்றது. அதனால் தான் அவற்றை காய வைத்து பதப்படுத்தி அமெரிக்க போன்ற நாடுகளில் தேநீர் போல அருந்துகின்றார்களாம்.

புற்றுநோய் மாத்திரமன்று இரத்த அழுத்தம், ஆஸ்த்துமா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குடல் புண், ஈரல் பாதிப்பு, நரம்பு தளர்ச்சி, உடல் நடுக்கம், இருதய கோளாறு, கிட்னி பாதிப்பு, இருமல் போன்ற பல்வேறு நோய்களையும் தீர்க்கும் உன்னதமான மருந்தாகவும் இயற்கையின் கொடையாகவும் முள்சீத்தாப்பழம் திகழ்கின்றது.

எனவே உங்கள் வீட்டுத்தோட்டங்களிலும் கடைகளிலும் கவனிப்பாரற்றுக் கிடக்கும் முள் சீத்தாப்பழங்களின் மேல் அதிக கவனம் செலுத்துங்கள். முடிந்த வரை அவற்றை வாங்கி உண்ணுங்கள். அல்லது ஜூஸ் செய்து குடியுங்கள். எந்த வகையான மண்ணிலும் வளரக்கூடிய தன்மை கொண்ட முள் சீத்தா செடிகளை உங்கள் வீட்டுத்தோட்டதிலும் நட்டு வையுங்கள். காரணம் எம் காலடியில் கிடக்கும் அப்பழங்களின் விலைகள் எதிர்காலத்தில் விரைவாக உயர்வதற்கும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை.

-தம்பி

You May Also Like

  Comments - 0

  • shaik Saturday, 27 June 2015 12:27 PM

    முள் சீத்தாப்பழம் புற்று நோய் உள்ளவர்கள் எவ்வாறு சாப்பிடுவது? சாப்பிடும் வழிமுறைகள் சொல்லவும்.

    Reply : 17       14


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X