Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நித்திரையில் இருந்த 21 வயதுடைய யுவதியை, வெள்ளை வானில் வந்த ஐவர் கொண்ட குழுவினர், இன்று (23) கடத்திச் சென்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காதான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி, ஜுனியர் வீதியில், இரு பெண் பிள்ளைகளைக் கொண்ட மேற்படி வீட்டில், இன்று அதிகாலை 1 மணிக்கும் 1.30 மணிக்கும் இடையில் வீட்டின் வெளிக்கதவின் பூட்டு, வாசல் கதவு ஆகியவற்றை உடைத்துக்கொண்டு குறித்த குழுவினர் உள்நுழைந்துள்ளனர்.
இதன்போது, வீட்டின் உரிமையாளர் அவர்களை பொல்லால் தாக்கியபோதும் அவர்கள் அவரைத் திருப்பித் தாக்கிவிட்டு, நித்திரையில் இருந்த யுவதியை கடத்திச் சென்றுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
யுவதியைக் கடத்திச் சென்ற குழுவுக்கு தலைமை தாங்கியவர் தமது வீட்டுக்கு ஏற்கனவே வந்துசென்றுள்ளார் என்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, வீட்டின் உரிமையாளரால் குறிப்பிடப்பட்டவர், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் முக்கிய கட்சியொன்றின் சார்பில் வேட்பாளாராக போட்டியிட்டவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
27 Apr 2025
27 Apr 2025
27 Apr 2025