2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

வெள்ளநீர் வழிந்தோடாமையால் மக்கள் சிரமம்

Princiya Dixci   / 2021 ஜனவரி 07 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, கோறளைப்பற்று மீராவோடை மீள் குடியேற்ற கிராமமான சுவாமி விபுலானந்தர் கோட்டத்தில் வெள்ளநீர் வழிந்தோட இருப்பதால் முடியாமல் இருப்பதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கவலை தெரிவித்தனர். 

அண்மையில் மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாகவே தமக்கு இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். 

இந்த நிலைமையைத் தவிர்க்கும் முகமாக 2 மாதங்களுக்கு முன்னதாகவே கால்வாய் வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோறளைப்பற்று பிரதேச சபைக்கு கடிதம் சமர்ப்பித்ததாகவும அதற்கு இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் அவர்கள் தெரிவித்தனர். 

எனவே, வெள்ளம் தேங்கியுள்ள பிரதேசத்தை நீர் வழிந்தோட வசதிகளை ஏற்படுத்தி தருமாறு, பாதிக்கப்பட்ட மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .