2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வெளிநோயாளர் பிரிவு தற்காலிக இடமாற்றம்

Princiya Dixci   / 2020 நவம்பர் 11 , பி.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்துக்கு, இன்று (11)  தொடக்கம் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கான சிகிச்சை வழங்கப்பட்டு, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் சேவைகளை வழங்குவதில் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.

இதனை கருத்திற்கொண்டு, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு மற்றும் மாதாந்த கிளினிக் சேவைகளை தற்காலிகமாக, காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்துக்கு, இன்று புதன்கிழமை தொடக்கம் மாற்றப்பட்டுள்ளதாக, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .