2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

வெறிச்சோடிக் காணப்படும் ஓட்டமாவடி

Princiya Dixci   / 2021 ஜனவரி 06 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கொரோனா தாக்கம் காரணமாக வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசம் இன்று (6) வெறிச்சோடிக் காணப்பட்டது. 

குறித்த பகுதியில் தொடராக மேற்கொள்ளப்பட்டு வரும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் முடிவுகளின் படி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பகுதியில் ஊரடங்குச் சட்டம் இல்லாத போதும் குறித்த பிரதேசம் சனநடமாட்டமின்றி வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

குறித்த பகுதியில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் பெரிதும் அச்ச நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  

இந்நிலையில், வாழைச்சேனை பிரதேச வர்த்தக நிலையங்கள் இன்று திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .