2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வீதியில் விழுந்து பெண்ணொருவர் மரணம்

Editorial   / 2022 டிசெம்பர் 09 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்பங்கேணி 40ஆம் கிராமத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

பெரியகல்லாறு பிரதான வீதியை சேர்ந்த நாகமணி பூமலர் என்னும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச கிராம சேவையாளர் தெரிவித்தார்.

பெரியகல்லாறிலிருந்து 40ஆம் கிராமத்திற்கு பஸ்ஸில் நேற்று (08) மாலை வந்திறங்கி மயான வீதியால் நடந்து சென்றுகொண்டிருக்கும்போதே அவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியால் இன்று காலையே சென்றவர்கள் சடலத்தினை கண்டு பிரதேச கிராம சேவையாளருக்கு அறிவித்துள்ள நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடுமையான குளிர் மற்றும் மழையுடனான காலநிலை நிலவிவரும் நிலையில் அதன்காரணமாக குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பகுதிக்கு சென்ற வெல்லாவெளி பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .