Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Mithuna / 2024 பெப்ரவரி 07 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜவ்பர்கான்
நீண்ட காலமாக புனரமைப்பின்றி காணப்பட்ட மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தேவபுரம் விளையாட்டு மைதானம் பல லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரனினால் புதன்கிழமை (07) திறந்து வைக்கப்பட்டுள்ளது .
குறித்த மைதானம் திறப்பு விழா, முன்னாள் பிரதி அமைச்சரின் இணைப்பாளரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் அமைப்பாளருமான நந்தகுமார் பிரதீப் தலைமையில் இடம் பெற்றதுடன் இவ் விழாவின் போது விளையாட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளன .
மேலும், இதன்போது உரையாற்றிய முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் , “தற்போதைய ஜனாதிபதியின் காலத்தில் பல அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந் நிலையில் விளையாட்டு துறையை ஊக்குவிப்பது நமது கடமையாகும். ஆகவே இவ்வாறான மைதானங்களை புனரமைப்பதனூடாக இந்த மாவட்டத்தில் விளையாட்டு துறையை கட்டி எழுப்ப முடியுமென எதிர்பார்க்கிறேன் ” என தெரிவித்துள்ளார் .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago