2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

விபத்தில் இளைஞன் பலி; வைத்தியர் கைது

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 28 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி, காத்தான்குடியில் கார் ஒன்றுடன் மோட்டர் சைக்கிள் மோதி, இன்று (28) அதிகாலை 5.30 மணிக்கு விபத்துக்குள்ளானது.

இதில் மோட்டர் சைக்கிளை செலுத்தி சென்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, காரை செலுத்திய வைத்தியர் ஒருவரை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடியைச் சேர்ந்த  21 வயதுடைய ஆதம்பாவை  முகமது  அம்ஹர் என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கல்முனையில் இருந்து மட்டக்களப்பை நோக்கிப் பயணித்த காரும் காத்தான்குடி, பீச் வீதியில் இருந்து பிரதான வீதி  சமிக்கை விளக்கு சந்தியை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளுமே, சமிக்கை விளக்கு சந்தியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளன.

மோட்டர் சைக்கிளில் பின்னால் இருந்தவரே படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிகப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .