2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

விசேட போதை ஒழிப்பு வேலைத்திட்டம்

Janu   / 2023 டிசெம்பர் 16 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் கீழ் விசேட போதை ஒழிப்பு வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படுவதாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாச்சகர்  சனிக்கிழமை (16) இடம்பெற்ற உயர் பொலிஸ் அதிகாரிகளுடனான மாநாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு  தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 போலிஸ் நிலையங்களையும்  சேர்ந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் போதை ஒழிப்பு பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பகாரிகள் உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகள் கறித்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (17) முதல் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இம்மாவட்டத்தில் விசேட போதை ஒழிப்பு சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் மற்றும் தேடுதல்கள் இடம்பெறவுள்ளதோடு  இதற்கென புதியதொரு தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ரகசியம் பேணப்படுவதற்காகவும் தொடர்பு ஏற்படுத்துகின்றவர்களுடைய தகவல்களை பொலிஸார் அறிந்து கொள்ளாதிருப்பதற்காகவும்   இவ்வாறு ரகசிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாச்சகர் தெரிவித்தார்.

ரீ.எல்.ஜவ்பர்கான்


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .