2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

வான் – மோட்டர் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி

Editorial   / 2021 நவம்பர் 29 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள வாழைக்காடு சந்தியில் வான் மற்றும் மோட்டர் சைக்கிள் ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதி, இன்று (29) காலை 8.30க்கு  விபத்துக்குள்ளாகின.

கொக்கட்டிச்சோலையில் இருந்து வவுணதீவு நோக்கி சென்ற  மோட்டர் சைக்கிளும் வவுணதீவு தாண்டியடியில் இருந்து கொக்கட்டிச்சோலை நோக்கிச் சென்ற வானுமே, வாழகைகாடு சந்தியில் வைத்து நேருக்கு நேர் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகின.

இதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய மைலப்போடி சுந்தரலிங்கம் என்பவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, வான் சாரதியை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.

உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .