2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

வான் கதவுகள் திறக்கப்பட்டதால் வயல்கள் பாதிப்பு

Princiya Dixci   / 2021 ஜனவரி 07 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக நிரம்பியிருந்த குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இம்மாவட்டத்தின் பாரிய நீர்த்தேக்க குளமான உன்னிச்சை குளத்தின் நீர் மட்டம் 31 அடியாக காணப்படுவதன் காரணமாக அக்குளத்தின் மூன்று வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக, வவுணதீவு பகுதியில் பெருமளவான வயல் நிலங்கள் வெள்ள நீரால் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. நூற்றுக் கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றதையும் அவதானிக்கமுடிகின்றது.

தற்போது வயல்கள் அறுவடைசெய்யும் காலமாகவுள்ள நிலையில் இவ்வாறு வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .