2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி

Janu   / 2025 பெப்ரவரி 06 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த எரிபொருள் பவுசர் வண்டியொன்று மட்டக்களப்பு - திருகோணமலை வீதி முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதிக்கு வந்த துவிச்சக்கர வண்டியுடன்  மோதியதில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்து

மற்றுமொருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் புதன்கிழமை (05) 7.45 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.

சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய வீரக்கட்டி ரமேஸ் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவம் தொடர்பில் பவுசர் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்திவெளி பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

பேரின்பராஜா சபேஷ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .