Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனராசா சரவணன், வ.சக்தி
“மட்டக்களப்பு, மயிலந்தனை மேச்சல்தரை விவகாரம் தொடர்பாக பிரபல சட்டத்தரணி இரத்தினவேலினால் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்துள்ளது. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன் ஆகியோர் மக்களை ஏமாற்றுவதற்காக வழக்குத் தொடரப் போவதாக அறிவித்து, மீண்டும் ஒரு கபட நாடகத்தை நடத்தியுள்ளனர்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்ததார்.
மட்டக்களப்பில் அவரது வீட்டில் நேற்று (14) இரவு நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மயிலத்தனைமடு மேச்சல்தரை பிரச்சினை தொடர்பாக பண்ணையாளர்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் முன்னரே முறையிட்டும் கூட அவர்கள் இழுபறிபோக்கை கடைப்பிடித்து வந்தனர்.
“கடந்த அரசாங்கத்தின் விருப்பங்களை பல்வேறு பகுதிகளாக நிறைவேற்றியிருக்கின்றனர். ஆனால், இந்த மாவட்டத்தில் மயிலத்தனைமடு மேச்சல்தரை மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்தல் போன்ற பாரதூரமான விடயங்களை தங்களுக்கிருந்த வாய்ப்பு இருந்த காலத்தில் சரியானமுறையில் பயன்படுத்தவில்லை.
“கூட்டமைப்பின் நாடாமன்ற உறுப்பிர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மா.சாணக்கியன், கோ.கருணாகரன் ஆகியோர் மயிலத்தனைமடு பண்ணையாளர்களை சந்தித்து ஒரு நாடகத்தை நடத்தி வழக்குத் தொடரப்போவதாக அறிவித்துள்ளனர்.
“உண்மையிலே மயிலத்தனைமடு பிரச்சினை தொடர்பாக பண்ணையாளர்களின் ஒத்துழைப்புடன், நீதிமன்றம் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை பிரபல சட்டத்தரணி இரத்தினவேலினால் வழக்குத் தாக்குதல் செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக எதிராளிகளுக்கு நீதிமன்றால் அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.
“இந்த வேலையை, கடந்த ஆட்சி காலத்தில் கடந்த அரசாங்கத்தைக் காப்பற்றிய போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்திருக்க வேண்டும். ஆனால், மக்களை ஏமாற்றுவதற்கா இன்று இங்குவந்து கபட நாடகத்தை செய்திருக்கின்றனர். எனவே, இளைஞர், யுவதிகளே இது குறித்து தெளிவாக இருக்கவேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
3 hours ago
4 hours ago
5 hours ago