Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2022 ஜனவரி 12 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் வருடாந்த மாநாடு, மாவட்ட சங்கத் தலைவர் என். ரவீந்திரகுமார் தலைமையில், மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் நேற்று (11) நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜகத் குமார ஆகியோர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன், கௌரவ அதிதியாக கலந்துகொண்டார்.
மேற்படி நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் 1 இற்கான நியமனக் கடிதங்கள் 61 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான மகஜரும் கையளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
29 minute ago
34 minute ago