Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 18 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இ.சுதாகரன்
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் ஆசிரியர் வருடாந்த இடமாற்ற கொள்கைக்கு அமைவாக 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கமைவாக, தகுதியான விண்ணப்பதாரிகள் தங்களது விண்ணப்பங்களை இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னதாக தாங்கள் சேவையாற்றும் பாடசாலை அதிபர் ஊடாக வலயக் கல்விப் பணிப்பாளர், பட்டிருப்புக் கல்வி வலயம், களுவாஞ்சிக்குடி என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இடமாற்ற நிபந்தனைகளான ஒரே பாடசாலையில் அல்லது விரும்பிய பாடசாலையில் 8 வருடங்களுக்கு மேல் கடமையாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் விண்ணப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
அத்துடன், 57 வயதுக்கு மேற்பட்டவர்கள் 8 வருடங்களைப் பூர்த்தி செய்திருப்பினும் அவர்கள் விரும்பும் பட்சத்தில் இடமாற்றத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.
தொண்டர் ஆசிரியர் நியமனம் பெற்றவர்கள் நியமனப் பாடசாலையில் சேவைக் காலத்தைக் கட்டாயம் பூர்த்தி செய்தல் வேண்டும். விண்ணப்பத்துடன், ஆசிரியர் முதல் நியமனக் கடிதம், கடமையேற்றல் கடிதம், தேசிய அடையாள அடையாள அட்டை, தற்போது கடமையாற்றும் பாடசாலையில் கடமையேற்றல் கடிதம் ஆகியவற்றின் பிரதிகள் கட்டாயம் இணைத்து அனுப்புமாறு, பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி புள்ளநாயகம் நகுலேஸ்வரி கேட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago