2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

‘றிச்சட்’க்கு ஆதரவளிக்கவும்

Princiya Dixci   / 2022 மார்ச் 23 , பி.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

இலங்கை தமிழ் சினிமாவில் உருவாக்கப்படும் திரைப்படங்களை இங்குள்ளவர்களும் புலம்பெயர்ந்தவர்களும் ஊக்கப்படுத்தும்போது, இலங்கை தமிழ் சினிமா துறை மேலும் வளர்ச்சியடையுமென மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக குருந்திரைப்படங்கள், முழு நீளத் திரைப்படங்களின் வருகை மிக வேகமாக இருக்கின்றது.

அந்தவகையில், நாளை (24) “றிச்சட்” என்னும் முழு நீளத் திரைப்படம், மட்டக்களப்பு மாவட்ட இளம் கலைஞர்களின் படைப்பாக வெளிவருகின்றது.

இத் திரைப்படம் தொடர்பிலான ஊடக சந்திப்பு, மட்டு. ஊடக அமையத்தில் இன்று (23) நடைபெற்றது.

இது தொடர்பில் இயக்குநர் கிருஸ்ணகுமார் பிறேமலக்சன் கருத்துரைக்கையில், “றிச்சட் திரைப்படத்துக்கு மக்களின் ஆதரவை நாம் கோருகின்றோம். இத்திரைப்படம் சில உண்மைக் கதைகளைத் தழுவியதாகவும் கற்பனை கலந்த கதாம்சம் கொண்டதாகவும் இருக்கின்றது.

“இதில் பிரதான கதாபாத்திரமேற்று விஸ்ணுஜன் மற்றும் இணை கதாபாத்திரமா சத்யா உட்பட மாவட்டத்தின் பல கலைஞர்கள் நடித்துள்ளார்கள்.

 “எமது இளைஞர்களின் இவ்வாறான முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவதற்கு அனைவரும் முன்வர வேண்டும். குறிப்பாக, புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது உறவுகள் இவ்வாறானவர்களை ஊக்கப்படுத்தி, மென்மேலும் படைப்புகளை உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.

பேட் டொட் ஸ்ரூடியோ பிறைவட் லிமிடட் மற்றும் ஆர்.என்.பி என்டர்டெயின்மன்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வழங்கும் “றிச்சட்” திரைப்படம், கல்லடி சாந்தி திரையரங்கில் நாளை மாலை 05.15 மற்றும் 06.45 காட்சிகளிலும், செங்கலடி செல்லம் திரையரங்கில் மாலை 06.15 காட்சியும் காண்பிக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .