2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

ரூ.2 ​கோடி செலவில் வைத்தியசாலை திறப்பு

Mayu   / 2023 டிசெம்பர் 04 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு நாவலடி ஆரம்ப சுகாதார சேவைகள் நிலையம் இன்று திங்கடக்கிழமை(04) காலை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் திறந்து வைக்கப்பட்டது

சுனாமி தாக்கத்தினால் முற்றாக பாதிக்கப்பட்ட நாவலடி பிரதேசத்தில் சுகாதார வைத்திய நிலையம் இன்மையால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சென்று தமது வைத்திய தேவைகளை நிறைவேற்றி வந்த நிலையில் இராஜாங்க அமைச்சர்களான சிவனேசத்துறை சந்திரகாந்தன் மற்றும் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் விடுத்த வேண்டுகோளை அடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் முயற்சியினால் இவ்வைத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .