Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2023 ஓகஸ்ட் 13 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்கு அனுப்புவதாக சுமார் ஒரு கோடி ரூபாய் பணமோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு அமிர்தகழி பிரதேசத்திலுள்ள போலி முகவர் ஒருவரின் வீட்டை ஞாயிற்றுக்கிழமை (13) கொழும்பில் இருந்து வந்த வேலைவாய்ப்பு பணியகத்தினரால் முற்றுகையிட்டு போலி முகவர் கைது செய்துள்ளார் என மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒருவரிடம் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 22 பேரிடம் பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றியுள்ளார்.
போலி முகவருக்கு எதிராக இருவர் கொழும்பு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாப்பு பணியக அதிகாரிகள் தொடர் விசாரணையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விசாரணையின் பின்னர் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனகராசா சரவணன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
23 minute ago
28 minute ago