2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது

Freelancer   / 2022 ஜூன் 25 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, காலடி, வேலூர் பகுதியில் யானைகளை கொன்று ஒரு ஜோடி தந்தங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை சிறப்பு அதிரடிப்படைக்கு  கிடைத்த தகவலின்படி, STF இன் கட்டளை அதிகாரி,  DIG  வருண ஜயசுந்தர, இரண்டாவது தள கட்டளைத் தளபதிஇ இன்ஸ்பெக்டர் TBRP க்கு அறிவுறுத்தினார். சிறிவர்தன உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் மட்டக்களப்பு பிரவுன்ரி வீதி பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த யானை தந்தங்களை கண்டுபிடித்துள்ளனர்.

சிறப்பு அதிரடிப்படை (STF) உலக பாரம்பரிய சின்னங்கள் மற்றும் அரசு இருப்புக்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தந்தம் மற்றும் முத்து கடத்தல்காரர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும், சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்களப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X