2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

யானைகள் அடாவடி; பயிர்கள் சேதம்

Editorial   / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குகநேசபுரம் கிராமத்தில் இன்று (01) அதிகாலை வேளையில் புகுந்த யானைகளின் அடாவடியால் தோட்டப் பயிர்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குகநேசபுரம் கிராமத்தில் வாழும் மக்கள், தங்களது காணியில் பயன்தரும் மரங்கள் மற்றும் மரக்கறித் தோட்டங்கள் அமைத்து பராமரித்து வரும் நிலையில் இரவு வேளைகளில் வரும் யானைகள் இவற்றை சேதப்படுத்திச் செல்கின்றன.

அவ்வாறே இன்றைய தினமும் மரவள்ளித் தோட்டம், வீட்டுப் பயிர்கள் மற்றும் வேலிகளை யானைகள் துவசம் செய்துள்ளன.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் குகநேசபுரம் பகுதி மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கு யானை வேலிகளை அமைத்து தருமாறு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .