2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்து

Freelancer   / 2023 ஜூன் 29 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம் எஸ் எம் நூர்தீன் 

 காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் வியாழக்கிழமை (29)  இடம் பெற்ற  மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய காத்தான்குடி கர்பலா வீதியிலிருந்து  வந்த மோட்டார் சைக்கிள் கடற்கரை வீதி வழியாக சென்ற மோட்டார்  சைக்கிளுடன் மோதுண்டதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது

இந்த விபத்து சம்பவத்தில் இரண்டு மோட்டார் சைக்கிளிலும் சென்ற  19, 20 மற்றும் 21 வயதுடைய 3 இளைஞர்களே படுகாயமடைள்ளனர்

படுகாயமுற்ற மூன்று இளைஞர்களும் காத்தான்குடி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X