2025 ஜனவரி 03, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

Janu   / 2024 மார்ச் 04 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள  சம்பவம்  திங்கட்கிழமை (04)  அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

எருவில் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் . 

குறித்த  இளைஞன் மற்றுமொரு  இளைஞன் ஒருவருடன்  , நண்பர் ஒருவரின் பிறந்த நாளிற்கு சென்று திரும்பி  வருகையில் மோட்டார் சைக்கிளின்  வேக கட்டுப்பாட்டை இழந்து  வீதி அருகிலுள்ள  மரமொன்றில்  மோதுண்டு  இவ்விபத்து  இடம்பெற்றுள்ளது.

இதன்போது,  மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் பலத்த காயங்களுடன் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  , மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்  வழியில் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றைய இளைஞர் தற்போது மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர் . 

மேலும் , உயிரிழந்த இளைஞனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வ.சக்தி 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X