2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிள் திருட்டு

Freelancer   / 2023 ஜூன் 20 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட் ஓட்டமாவடியிலுள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திங்கட்கி​ழமை (19) திருடப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்ஸர் மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடிச் செல்லும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி  கெமராவில் பதிவாகியுள்ளது.

இத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X