Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 ஜனவரி 24 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ், ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன், கனகராசா சரவணன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெப்ரவரி 1ஆம் திகதி தொடக்கம் மேலும் 181 பட்டதாரிகள் பட்டதாரி பயிலுநர்களாக புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன் கருணாகரன் மாவட்ட ஊடகப்பரிவுக்கு தகவல் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இணைத்துக் கொள்ளப்படாமல் விடுபட்டிருந்த 389 பட்டாதாரிகள் மேன்முறையீடு செய்திருந்தனர்.
அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, அவற்றில் 181 பேர் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிகள், இதற்கு முன்னர் தனியார் நிறுவனங்களில் கடமையாற்றி ஈ.பீ.எப்., ஈ.ரீ.எப். நிதியத்துக்குப் பங்களிப்புச் செய்யப்பட்டவர்களும், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றவர்களுமாவர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்களை தத்தமது பிரதேச செயலகங்களில் நாளை (25) முதல் பெற்றுக் கொள்ளமுடியும் எனவும் இவர்களுக்கான பயிற்சிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் தெரிவித்தார்.
இதனடிப்படையில், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு 46 பட்டதாரிகளும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு 29 பட்டதாரிகளும், ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகத்துக்கு 23 பட்டதாரிகளும், மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்துக்கு 16 பட்டதாரிகளும், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்கு 18 பட்டதாரிகளும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
அத்துடன், ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்துக்கு 9 பட்டதாரிகளும், போரதீவுப்பற்று பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு 6 பட்டதாரிகளும், காத்தான்குடி, கிரான், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகங்களுக்கு தலா 6 பட்டதாரிகளும், வவுணதீவு பிரதேச செயலகத்துக்கு 5 பட்டதாரிகளும், வாகரை பிரதேச செயலகத்துக்கு ஒரு பட்டதாரியுமாக மொத்தம் 181 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
கடந்த ஆண்டு இம்மாவட்டத்தில் 2,088 பட்டதாரி பயிலுநர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்ததில் 1,966 பட்டதாரி பயிலுநர்கள் மாத்திரமே 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தமது கடமையைப் பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
49 minute ago
55 minute ago
2 hours ago