Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2022 ஒக்டோபர் 20 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பில் உள்ள தனியார் சர்வதேச பாடசாலை ஒன்றில் கடமையாற்றிவரும் 46 ஆரியர்களுக்கு உரிய ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு செலுத்தவேண்டடிய 66 இலட்சம் ரூபாவை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்தப் பாடசாலையின் உரிமையாளரான முன்னாள் அமைச்சர் அலி சாஹிர் மௌலானா உட்பட பாடசாலையின் நிர்வாகத்தைச் சேர்ந்த 4 பேருக்குமே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உரிய நிதியங்களுக்கான நிதியை இன்று வியாழக்கிழமை (20) செலுத்துமாறும் இல்லாவிடில் 6 சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவானும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் அன்னவர் சதாத் உத்தரவிட்டார்.
சர்வதேச பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 வரையில் ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு 66 இலட்சத்து 54 ஆயிரத்து 779 ரூபாய் 40 சதம் செலுத்தவேண்டும்.
பாடசாலையின் உரிமையாளரான முன்னாள் அமைச்சர் அலி சாஹிர் மௌலானா மற்றும் பாடசாலை நிர்வாகத்தைச் சேர்ந்த அவரது மனைவி மற்றும் உறவினர் உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு தொழில் திணைக்களம் , மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago