Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 20 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைகளில் உள்ள ஒட்சிசன் தேவையை நிவர்த்திக்கும் வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது ஒட்சிசன் உற்பத்தி நிலையம் திறந்துவைக்கப்பட்டது.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இந்த ஒட்சிசன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு, நேற்று (19) திறந்துவைக்கப்பட்டது.
சுகாதார அமைச்சின் அனுசரனையுடனும் மலேசியாவின் அலாக்கா அமைப்பு மற்றும் மட்டக்களப்பில் உள்ள நாம் சமூகம் அமைப்பு ஆகியவற்றின் பங்களிப்புடன், சுமார் 65 மில்லியன் ரூபாய் செலவில் இந்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நா.மயூரன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில், சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச்.முனசிங்க மற்றும் சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இதுவரையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு கொழும்பு, அநுராதபுரம் மற்றும் மாஹோ ஆகிய பகுதிகளிலிருந்தே ஒட்சிசன் பெற்றுவந்த நிலையில், களுவாஞ்சிகுடியில் நிர்மாணிக்கப்பட்ட ஒட்சிசன் உற்பத்தி நிலையம் ஊடாக இனி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு ஒட்சிசன் வழங்க முடியுமென இங்கு தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago