2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

முகாமையாளர்களுக்கு பொலிஸார் அறிவுரை

Freelancer   / 2023 பெப்ரவரி 07 , பி.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ. சக்தி

வங்கிகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தவது தொடர்பில், வங்கி முகாமையாளர்களுடனான கலந்துரையாடல், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (06) நடைபெற்றது.

களுவாஞ்சிகுடி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபயவிக்கிரம தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள அரச, தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, களுவாஞ்சிகுடி பொலிஸ்நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜோய், வங்கி முகாமையாளர்களுக்கு பாதுகாப்பு தொடர்பிலான விளக்கங்களையும்தெளிவூட்டல்களையும் வழங்கினார்.

நாட்டின் பல இடங்களில், வங்கிகளின் தன்னியக்க பணவைப்பு மற்றும் மீள எடுத்தல் இயந்திரங்கள் அண்மையில் களவாடப்பட்டுள்ளன. இந்நிலையில், களுவாஞ்சிகுடிப் பிரதேசத்திலுள்ள வங்கிகளின் பாதுகாப்பைப் பலப்படுத்த பொலிஸாரின் முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றும் வங்கி முகாமையாளர்கள் இதில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்
கேட்டுக்கொள்ளப்பட்டது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .