2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

முகத்துவாரத்தில் ஆற்றுவாய் வெட்டும் பணிகள் ஆரம்பம்

Freelancer   / 2023 ஜூலை 05 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம் எஸ் எம் நூர்தீன் 

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளிற்குட்பட்ட சுமார் 3000 ஏக்கர்களில் செய்கை பண்ணப்பட்டுள்ள அறுவடையை எட்டியுள்ள வயல் நிலங்கள் காட்டு வெள்ள நீர் நிரம்பி காணப்படுவதனால் மிகவும் பாதிக்கப்பட்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்திற்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி சபை மற்றும்  மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் ஆகியவை மாவட்ட நிருவாகம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிடம் விடுத்த வேண்டுகோளிற்கு அமைவாக மேற்கொண்ட கள விஜயத்தினை தொடர்ந்து  செவ்வாய்க்கிழமை (04) மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில் ஆற்றுவாய் வெட்டும் பணிகள் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X