2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மீன் உண்டதால் தாயும் உயிரிழப்பு

Freelancer   / 2023 ஜூன் 12 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி        

மட்டக்களப்பு மாவட்டம் மாங்காடு எனும் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை (08)  கடல் மீனினமான பேத்தை இன மீனை சமைத்து உட்கொண்டத்தில் சுகயீனமுற்று வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு பெண்ணும் ஞாயிற்றுக்கிழமை(11) இரவு உயிரிழந்ததாக வைத்தியசாலை  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய யூலியாமலர்  எனும் பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.

இந்நிலையில் களுவாஞ்சிகுடி பகுதி பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் அவர்கள் உட்கொண்ட உணவு மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன் களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X