2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மீண்டும் வாராந்த சந்தை

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 07 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

இடைநிறுத்தப்பட்டிருந்த மீராவோடை வாராந்த சந்தை மீண்டும் இன்று (07) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை பகுதியில் இந்த வாராந்த சந்தை 2018 ஆம் ஆண்டு 8 ஆம் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்த இந்த வாராந்த சந்தை, முறையான அனுமதி பெறப்படவில்லை என்று வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஓட்டமாவடி பிரதேச சபையினர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.  

குறித்த வழக்கு நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து ஓட்டமாவடி பிரதேச சபை தொடர்ந்தும் வாராந்த சந்தையை நடத்த மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு அனுமதியை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், இவ் வாராந்த சந்தை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மீராவோடையில் இடைநிறுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் வாராந்த சந்தை வாழைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் நடத்தப்பட்டு வந்தது.

அந்தச் சந்தை அதே பகுதியில் தொடர்ந்தும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .