2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மிளகாயில் வாடல்நோய்; செய்கையாளர்கள் பாதிப்பு

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 31 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

மிளகாய் செய்கையில் ஒருவித வாடல் நோய் பரவுவதனால் செய்கையாளர்கள் மிகவும் நட்டத்தை எதிர்கொண்டு வருவதாக மட்டக்களப்பு - களுதாவளைப் பிரதேசத்தில் மிளகாய் செய்கையில் ஈடுபட்டுவரும் செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தாம் பரம்பரை பரம்பரையாக மேட்டு நிலத்தில் மிளகாய், கத்தரி, வெண்டி, பயற்றை, வெங்காயம், உள்ளிட்ட பயிர்களை மேற்கொண்டு வரும் நிலையில், இம்முறை மேற்கொண்டுள்ள மிளகாய் செய்கையில் ஒருவித வாடல் நோய் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நோய் காரணமாக மிளகாய் செடிகள் நன்கு பூத்து காய்க்கும் நிலைக்கு வரும் வேளையில், திடீரென வாடிப்போய் இறந்து விடுகின்றன. இதனால் தாம் பெரும் நட்டத்தை எதிர்கொண்டு வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை வெளியிடுகின்றன.

அதிக உஷ்ணம் காரணமாகவும் பங்கஸ் தாக்கத்தினாலும், மிளகாய் செடிக்கு இந்த நோய் ஏற்படுவதாக விவசாயப் போதனாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

மிளகாய் செய்கை இடைநடுவில் இவ்வாறு கைவிடப்படுவதனால் மரவள்ளி போன்ற மாற்றுப் பயிரிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .