Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 16 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, கே.எல்.டி.யுதாஜித், க.விஜயரெத்தினம், கனகராசா சரவணன், எம் எஸ் எம் நூர்தீன்
மியன்மார் இராணுவ ஜுன்டா ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் எனவும் மியன்மாரில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்குமாறும் கோரி, வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண பொது அமைப்புகள் ஒன்றிணைந்து, மட்டக்களப்பு - காந்திபூங்காவில் இன்று (16) கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
இக்கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சிவில் அமைப்புகள், போரால் பாதிக்கப்பட்ட சமூகப்பிரிவினர், பெண்கள் அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு, கிழக்கு வாழ் பொதுமக்கள், வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டம் தொடர்பிலான ஊடக அறிக்கையும் இதன்போது வெளியிடப்பட்டதுடன், இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர்களுக்கு இவ்வறிக்கை சமர்ப்பிதற்கான நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டன.
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய அதிகாரி ஆகியோருக்கு இவ்வறிக்கை அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
6 hours ago
6 hours ago
7 hours ago