2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

மினி சூறாவளியால் 65 வீடுகள் சேதம்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட சந்திவெளி பாலையடித்தோனா கிராமத்திலுள்ள 65 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

நட்புறவு கிராமத்தில் இம்மாதம் 28ஆம் திகதி இரவு 9 மணி முதல் பெய்த பலத்த மழையுடன் வீசிய சுழல் காற்று 15 நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக வீசியதன் காரணமாக மேற்படி 65 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவிலும் கோரளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் கும்புறுமுலை கிராமத்திலும் இரு வீடுகளும் சேதமடைந்துள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

சேதமடைந்துள்ள வீடுகளை முழுமையாக புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கையை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர் எனவும் இதற்கான மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்று, நட்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .