2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

“மிகுதி விவசாயிகளுக்கு நட்டஈடு எப்போ?”

Freelancer   / 2022 பெப்ரவரி 16 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில்  வரட்சியின் காரணமாக  விவசாய, வேளாண்மைச் செய்கைகளில் பாதிப்படைந்த மிகுதி விவசாயிகளுக்கு எப்போது நடஈடு வழங்கப்படும்? என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமம் ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெத்தினம்  கேள்வி எழுப்பியுள்ளார்.

பெரும்போக வேளாண்மை செய்கையில் ஏற்பட்ட விவசாயப்பாதிப்பு தொடர்பில் கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

அதே நேரம்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்ணளவாக ஒரு இலட்சத்தி என்பத்தையாயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் காணிகளில் 2020-2021 பெரும்போக வேளாண்மை செய்கை  பண்ணப்பட்டது.
 
இதில் அண்ணளவாக ஒருஇலட்சத்தி பத்தாயிரம் ஏக்கர் மழையை நம்பியும், ஏனைய எழுபத்தையாயிரம்  ஏக்கர்  உறுகாமம், உன்னிச்சை, நவகிரி,வாகனேரி,கித்துள்,தும்பங்கேணி, அடைச்சகல், கண்டியனாறு, புளுக்குநாவி, கடுக்காமுனை, கங்காணியார் குளம், ஆணைசுட்டான் குளம், தரவை, மியான்கல்குளம், நற்பத்தாவெளி குளங்கள் உட்பட இன்னும் பல குளங்களை பயன்படுத்தி வேளாண்மை செய்கை பண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
 
இப்படி வரட்சி ஏற்பட்டதன் காரணத்தினால் அண்ணளவாக இருபத்தையாயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் வேளாண்மைக் காணிகளில்   முழுமையாகவும், பகுதிச் சேதமளவிலும் வேளாண்மை  பாதிப்படைந்துள்ளது.
 
வரட்சியின் காரணமபாக வேளாண்மைச் செய்கையில் பாதிப்படைந்த ஏனையமாவட்டங்களிலுள்ள விவசாயிகள் அனைவருக்கும் நஸ்டஈடு வழங்கப்பட்டது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை.
 
இதேவேளை கடந்த வாரம் இப்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறிப்பாக 50ற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு(250ற்கு மேற்பட்ட விவசாயக் காணிகள்)    நஸ்டஈடு வழங்கி உள்ளதாகவும், ஏனைய மாவட்டத்திலுள்ள இருபத்தையாயிரத்திற்கு மேற்பட்ட காணிகளுக்கு நஸ்டஈடு விரைவாக வழங்குவதாகவும் இவ் அரசு அறிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.
     
எனவே வரட்சியினால் பாதிப்டைந்த விவசாயிகளுக்கு விரைவாக நஸ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பத்மநாபா மன்றம்- ஈ.பி.ஆர்.எல்.எப், இரா.துரைரெத்தினம் அரசிற்கு வேண்டுகோள் விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .