2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

மாவீரர் தினத்துக்கு கப்பம் கேட்ட மச்சான் கைது

Editorial   / 2023 நவம்பர் 28 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு மைத்துனனிடம் 15 இலட்சம் ரூபாய் கப்பம் கேட்ட, 41 வயதான மைத்துனன் (மச்சான்)  கைது செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று மட்டக்களப்பு, வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளது.

திங்கட்கிழமை (27) கைது செய்யப்பட்டு, வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள குறுவாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந் ஒருவருக்கு 2021 ம் ஆண்டு  அதிர்ஷ்டலாபச் சீட்டின் மூலம் 10 கோடி ரூபாய் பணப்பரிசு கிடைத்துள்ளது.

அதிர்ஷ்டலாபச் சீட்டின் மூலம் கிடைத்த பணத்தில் தனக்கும் ஒரு பங்கை தருமாறு, அடிக்கடி ​தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில்  ஞாயிற்றுக்கிழமை (27) வீட்டுக்குச் சென்ற மைத்துனன். மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரியுள்ளார். இதுதொடர்பில்,  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, கப்பம் கோரிய நபரை பொலிஸார் கைது செய்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

கனகராசா சரவணன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .