Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 செப்டெம்பர் 21 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் மாவட்டத்துக்குள்ளேயே கடமையாற்றக் கூடியதாக வழங்கப்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த விடயம்பற்றி இன்று (21) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச துறையில் நிரந்தர நியமனம் வழங்கும் நோக்குடன் 2019 ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
“இவ்வாறு பயிலுனர்களாகக் கடமையாற்றி வந்த 386 பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் ஆளணி அனுமதிக்கமைவாக தற்போது நிரந்தர அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
“மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி பயிலுனர்கள் 185 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டு, அவர்களில் சுமார் 25 பேர் மாத்திரமே மாவட்டத்துக்குள் கடமை புரிய இணைக்கப்பட்டுள்ளனர்.
“மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஏனைய சுமார் 160 ஆண், பெண் பட்டதாரிகளுக்கு மாவட்டத்துக்கு வெளியிலேயே நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
“இவர்களில் பெரும்பாலன பட்டதாரி பெண்கள், திருமணமாகி கைக்குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்ற நிலையில், வெளி மாவட்டங்களில் நியமனம் வழங்கப்பட்டுள்ளதால், குடும்பக கட்டமைப்பு சீர் குலையும் என்று ஆதங்கப்படுகின்றார்கள்.
“எனவே, தற்போதைய கொவிட் தொற்று பரவல் நிலைமையை கருத்திற் கொண்டு, மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளை அவர்கள் பயிலுனர்களாக கடமையாற்றிய அலுவலகங்களிலேயே நிரந்தரமாக கடமையாற்றும் வகையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தை உடனடியாக மாற்றிக் கொடுக்க வேண்டும்” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
51 minute ago
51 minute ago