Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 நவம்பர் 29 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு, இன்று (29) நடைபெற்றது.
அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவிகளுக்கு இலங்கை பரீட்சை திணைக்களத்தால் அனுப்பி வைக்கப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன், கற்பித்த ஆசிரியர்களுக்கு பிரதேச தனவந்தர் ஒருவரின் பங்களிப்பில் பணப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஸாப், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.யூ.எம்.இஸ்மாயில், ஏ.எம்.ஜாபிர் கரீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago