2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு

Freelancer   / 2023 மார்ச் 02 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம் நூர்தீன்

கனடா கல்வி அமைப்பின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்ட அறம் அமைப்பின் ஒத்துழைப்புடன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 1982ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்களின் நிதிப் பங்களிப்பில், மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களுக்கான 41 துவிச்சக்கரவண்டிகள் மட்டக்களப்பில் வைத்து நேற்று (01) வழங்கப்பட்டன.

கனடா கல்வி அமைப்பின் கிழக்கு மாகாண கல்வி மேம்பாட்டுக்கான இணைப்பாளர் சிரேஷ்ட இலங்கை நிர்வாக  சேவை அதிகாரி  மா.தயாபரன் தலைமையில், மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் இந்நிகழ்வு நடைபெற்றது. 

வறுமைக்கோட்டில் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் இதன்போது வழங்கப்பட்டதுடன், கிழக்கு மாகாணத்தில் உள்ள மாணவர்களுக்கு 75 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், யாழ். இந்துக் கல்லூரியின் 1982ஆம் ஆண்டு உயர்தர பழைய மாணவர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றுமு் பெற்றோர் எனப் பலர் கலந்துகொண்டனர் . (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X