Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 மே 05 , பி.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
அரசியலமைப்பின 13-வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தயாராக இருக்கின்றார் என்றார் அதனை மனோ கணேசன் ஊடாக சொல்லக்கூடாது,தமிழ் தேசியத்திற்கான தமிழ் மக்களது பிரதிநிதிகளாக இருப்பவர்களை அழைத்து அவர் கூற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
நாங்கள் ஒன்று பட வேண்டும் எதனை செய்கின்றோமோ யாராவது ஓர் உண்மையாக வாக்குறுதிகளை பெற்று பகிரங்கமாக வேண்டும் என்றால் ஒரு சர்வதேச நாட்டில் சாட்சியுடன் வாக்குறுதிகளை பெற்று வாக்களிப்பதா அல்லது பொது வேட்பாளரை நிறுத்துவதா? என்பதனை நாங்கள் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் ஸ்ரீ சபாரத்தினம் அவர்களின் 38வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில் சனிக்கிழமை (04) நடைபெற்றது.
மே மாதம் 06ஆம் திகதி தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் சபாரத்தினம் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது நினைவேந்தல் நிகழ்வினை வருடாந்தம் தமிழீழ விடுதலை இயக்கம் அனுஸ்டித்துவருகின்றது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார்,மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னர் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது தலைவர் அமரர் ஸ்ரீசபாரத்தினம் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரம்,
சபாரத்தினம் அவர்கள் ஒற்றுமையை விரும்பியவர் என்பதற்காக தமிழீழ இயக்க இந்த வாரத்தை தமிழ் தேசிய ஒற்றுமை வாரம் என்பதாக பிரகடனப்படுத்தி இந்த வாரத்தை நாங்கள் அவரது நினைவாக அனுஷ்டித்து கொண்டு வருகின்றோம்.
உண்மையில் இன்று தமிழ் ஈழத்திற்காக போராடிய நாங்கள் எங்கு நிற்கின்றோம் என்றால் திசை தெரியாமல் நடு சந்தியிலே தமிழ் கட்சிகள் மாத்திரம் அல்ல தமிழ் மக்களும் நின்று கொண்டிருக்கின்றார்கள்.
87 ஜூலை கால கட்டங்களில் அந்தப் போராட்டம் இறுதி கட்டத்தை அடைந்து கொண்டிருந்தது.இந்தியா மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை கடல் வழியாக அனுப்பியது அந்தக் கப்பல் இலங்கை கடற்படையினரால் திருப்பி அனுப்பபட்டதுடன் ஆகாய மார்க்கமாக உணவு பொட்டலங்கள் போடப்பட்டது. அது ஜே.ஆர் ஜெயவர்த்தனவிற்கு கொடுக்கப்பட்ட ஒரு மிரட்டல் அந்த மிரட்டலுடன் தான் இலங்கை இந்தியா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
1983 ஆம் ஆண்டு ஜூலை ஏற்பட்ட கலவரத்திற்கும் 1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்தியா ஒப்பந்தத்திற்கும் இடைப்பட்ட காலம் நான்கு வருடங்கள் இந்த காலத்தில் வட கிழக்கிலே போரினால் கொல்லப்பட்ட தமிழர்கள் என்றால் ஒரு சிலர் நூற்றுக்கணக்கானவர்கள் மாத்திரம் தான் அது மாத்திரமல்லாமல் ஒரு தலைவர் கொல்லப்பட்டார் என்றால் சபாரத்தினம் மாத்திரம் தான்.
நாங்கள் எங்களது போராட்ட வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் பல சந்தர்ப்பங்களில் தவற விட்டு இருக்கின்றோம். அதில் ஒரு சந்தர்ப்பம் தான் இலங்கை இந்தியா ஒப்பந்தம் இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை நாங்கள் அன்று எங்களுடைய இன பிரச்சனைக்குரிய தீர்வு காண ஒரு ஆரம்ப புள்ளியாக நாங்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் இன்று வட கிழக்கு இருக்கின்ற நிலைமை வேறாக இருந்திருக்கும்.
ஆனால் நாங்கள் அதனை தவற விட்டது என்று நாங்கள் இருக்கும் நிலையை தற்போது எங்களது பிரதேசங்களை எங்களது மாவட்டங்களை எங்களது நிலங்களை எங்களது எல்லை புறங்களை காப்பாற்ற முடியாத நிலையில் இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கெஞ்சிக் கொண்டிருக்கின்றோம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை யாவது முழுமையாக நிறைவேற்றுங்கள் என்று. ஆனால் வருகின்றது ஜனாதிபதி தேர்தல் இந்த வருட இறுதியிலே இந்த வருடம் முடிவதற்கு முன்பு இந்த நாட்டின் புதியதொரு ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் இடம் பெற இருக்கின்றது.
தற்போது களத்தில் எங்களுக்கு தெரிய மூன்று வேட்பாளர்கள் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திசாநாயக்க இவர்கள் தமிழ் மக்களுக்கு அவர்களது புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை காண்பதற்கு என்ன வழி என்று சிந்திப்பதை விடுத்து தமிழ் மக்களது வாக்குகளை எவ்வாறு பெறலாம் என்றே சிந்தனையிலே இருக்கின்றார்கள்.
இந்த நாடு பொருளாதார ரீதியாக கடந்த மூன்று வருடங்களாக அதல பாதாளத்திற்கு சிக்கி தவிக்கின்றது இந்த பொருளாதார வங்குரோத்து நிலைமைக்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர துடிப்பவர்கள் சிந்திக்கின்றார்கள் இல்லை இலங்கையில் உள்ள இனப்பிரச்சினை தான் முக்கியமான காரணம் என்று.30 வருடங்களுக்கு மேலாக இலங்கை அரசு போர் செய்திருக்கின்றது ஜே.ஆர்.ஜெயவர்த்தன போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று அந்தப் போரை தொடங்கினார். அந்தப் போருக்காக இலங்கை அரசாங்கம் எத்தனை மில்லியன் டொலர்களை ஆயுதங்களுக்காக ஆமட்காரர்களுக்காக கிபீர் விமானங்களுக்காக குண்டுகளுக்காக ஏவுகணைக்காக பல்குழல் துப்பாக்கிகளுக்காக எத்தனை பில்லியன் டொலர்களை செலவழித்து இருப்பார்கள் அதனால் இந்த நாட்டிற்கு ஏற்பட்ட நஷ்டம் பாதிப்பு என்ன என்பதனை புரிந்து கொள்ளாமல் தற்போதும் வடகிழக்கு மக்களுக்கு உள்ள பிரச்சினைகளை புரிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள்.
கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வரும் போது கூறினார் இங்கு தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை பொருளாதார ரீதியாக அவர்கள் வலுப்பெற்றால் சரி என்று ஆனால் தற்போது ஒரு ஜனாதிபதி வேட்பாளராக ஒரு ஜனாதிபதி கனவோடு இருக்கும் அனுரகுமார திசாநாயக்க கிளிநொச்சியில் கூறுகின்றார் தான் அரசுக்கு வந்தால் மூன்று வேளை சாப்பாடு கொடுப்பேன் என்று அப்போது இந்த மக்கள் வடகிழக்கு மக்கள் சோத்துக்காக தான் போராடினார்கள் என்பது அவருடைய கணிப்பு.
அதேபோன்று சஜித் பிரேமதாச கூறியதாக மனோ கணேசன் கூறுகின்றார் சஜித் பிரேமதாச 13-வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றார் என்று.
அதனை இவர் கூறக்கூடாது தமிழ் தேசியத்திற்காக தமிழ் மக்களது பிரதிநிதிகளாக இருப்பவர்களை அழைத்து அவர் கூற வேண்டும் ஆக குறைந்தது அதன் மூன்றாவது திருத்தச் சட்டத்தையாவது அந்த திருத்தச் சட்டத்தில் உள்ளதை உள்ளபடி முழுவதுமாக நான் அமுல்படுத்துவேன் என்பதனை எங்களுக்கு மாத்திரமல்ல சிங்கள மக்களுக்கும் எங்களுக்கு ஒரு கதை வட கிழக்கிற்கு ஒரு கதை தெற்கிற்கு ஒரு கதை கூறாமல் பகிரங்கமாக அறிவித்து அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அதனை கொண்டு வர வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
26 minute ago
2 hours ago