Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன், பேரின்பராஜா சபேஷ், ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மதஸ்தலங்களுக்கு ஒரு தடவையில் 5 பேருக்கு மேல் வழிபட செல்ல விதிக்கப்பட்ட தடை தற்போது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி 25 பேர் சென்று வழிபட தளர்த்தப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நேற்று (12) நடைபெற்ற மாவட்டச் செயலக கொரோனா தடுப்புச் செயலணிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்மாதம் 8ஆம் திகதிக்குப் பின்னர் எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின்படி, எந்தவிதமான புதிய தொற்றாளர்களும் இனங்காணப்படாததால் மற்றும் நீண்ட காலமாக மதஸ்தலங்களுக்கு 5 பேர் என்ற எண்ணிக்கையையில் சென்று வழிபடமுடியுமென விதிக்கப்பட்டிருந்த எண்ணிக்கையை அதிகரிக்குமாறு மதத் தலைவர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இருந்தபோதும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி செயற்படவேண்டும் என்பது கண்டிப்பானது என்பதுடன், அதனை கவனிப்பது மதஸ் தலங்களின் நிர்வாகத்தின் பெறுப்பாகும் எனவும் மீறுவேருக்கு எதிராக சுகாதார அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
3 hours ago
4 hours ago
5 hours ago