2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மட்டு. போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவும் போராட்டம்

Princiya Dixci   / 2022 மார்ச் 14 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

நாடளாவிய ரீதியில் சுகாதார துறை ஊழியர்கள், இன்று (14) ஒரு மணி நேர பணிப் பகிஸ்கரிப்பை முன்னெடுத்ததுடன், கவனயீர்ப்புப் போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டங்களை, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம், சுகாதார தொழில் வல்லுநர்கள் சம்மேளனம் உட்பட பல சுகாதாரத் தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்தன.

இன்று நண்பகல் 12 மணி தொடக்கம் 1 மணி வரையில் இப்போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக பதாகைகளை ஏந்தியவாறு, “மருந்து மாபியா கொள்ளைகளை நிறுத்து”, “பதவி உயர்வுகளை வழங்கு”, “சம்பள முரண்பாட்டை நீக்கு” என கோஷங்களை எழுப்பி சுகாதாரத் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .