Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 15 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக நிர்வாக சேவை 01 அதிகாரியான பொறியியலாளர் ந.சிவலிங்கம், தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
மட்டக்களப்பு மாநகர சபைக்கு இன்று (15) காலை வருகை தந்த புதிய ஆணையாளரை, மாநகர சபையின் பிரதி மேயர் க.சத்தியசீலன் மற்றும் உத்தியோகத்தர்கள் வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து ஆணையாளர் கையெழுத்திட்டு, தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தி.சரவணபவன், பிரதி மேயர், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா,மாநகர சபை உத்தியோகத்தர்கள் முன்னிலையில் அவர் கடமையைப் பொறுப்பேற்றார்.
இலங்கை நிர்வாக சேவை (தரம் -1) உத்தியோகத்தரான இவர், உலக வங்கித் திட்டத்திலும் , பின்னர் மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இதுவரை மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக பதவி வகித்த மா.தயாபரனுக்கு பதிலாக புதிய ஆணையாளராக ந.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago