2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

‘மட்டு. கல்வி வலயம் முன்னேறுகிறது’

Princiya Dixci   / 2022 மார்ச் 28 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

2021ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் பகுப்பாய்வுகளின் படி, மட்டக்களப்பு கல்வி வலயம் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்ற அடிப்படையில், இலங்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அகில இலங்கை ரீதியான தரம் ஐந்து 2021ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பகுப்பாய்வுகளின் படி, மட்டக்களப்பு கல்வி வலயம் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்ற அடிப்படையில் இலங்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

“இலங்கையிலுள்ள 100  கல்வி வலயங்களுள் மட்டக்களப்பு கல்வி வலயம் 2ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து 2,050 பிள்ளைகள் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார்கள். இவர்களுள் 449 பிள்ளைகள் வெட்டுப் புள்ளிக்குமேல் சித்தியைப் பெற்றிருக்கின்றார்கள்.

“2020ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் 433 மாணவர்கள் வெட்டுப் பள்ளிக்கு மேல் சித்தி பெற்று, அகில இலங்கை ரீதியில் எமது வலயம் ஐந்தாம் இடத்தில் இருந்தது.

“அதேபோல் சித்தி பெறுதல் என்ற அடிப்படையில் எமது கல்வி வலயம் தற்பொது இலங்கையில் 26ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. 2020ஆம் ஆண்டு 57ஆம் இடத்தில் இருந்தோம். இது மிகவும் முன்னேற்றகரமாக இருக்கிறது” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .