Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 ஜனவரி 27 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது. இம்மாதம் 08ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான ஒருவார காலத்துக்குள் 145 பேர் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன்படி, வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 45 நோயாளர்களும், கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 நோயாளர்களும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 நோயாளர்களும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 நோயாளர்களும், மண்முனை வடக்கு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 நோயாளர்களும் இனங் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 நோயாளர்களும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 நோயாளர்களும், ஏறாவூர் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 நோயாளர்களும், மண்முனைப் பற்று ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 நோயாளர்களும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 நோயாளர்களும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருமாக மொத்தம் 145 பேர் டெங்கு நோய் பாதிப்புக்குள்ளானவர்களாக இனங் காணப்பட்டுள்ளனர்.
வாகரை, பட்டிப்பளை, வவுனதீவு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடத்தில் 610 பேர் டெங்கு நோய்த் தாக்கத்துக்குட்பட்டுள்ளதாகவும் இதுவரை எவரும் மரணமடையவில்லை எனவும் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மழைகாலத்தில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு, வீடுச் சுழலில் தேங்கிக் கிடக்கின்ற குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்களை அகற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம்கொடுக்காத வகையில், சூழலை துப்புரவாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
43 minute ago
49 minute ago
2 hours ago