Editorial / 2021 நவம்பர் 10 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாநகர சபை அமர்வு, மட்டக்களப்பு மேயர் தி.சரவணபவன் தலைமையில் இன்று (10) காலை ஆரம்பமானது.
எனினும், துறைசார் உத்தியோகத்தர்கள் சபைக்கு சமூகமளிக்காமை மற்றும் கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்படாமையை சுட்டிக்காட்டி, சபை அமர்வை மேயர் ஒத்திவைத்ததார்.
இதனால், மட்டக்களப்பு மாநகர சபையின் செயற்பாடுகளை கிழக்கு மாகாண ஆளுநர் குழப்புவதாகத் தெரிவித்து, சபை உறுப்பினர்கள் சபையினுள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது, சபையினுள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் உறுப்பினரும் கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராகவும் மாநகர சபையின் ஆணையாளருக்கு எதிராகவும் போராட்டம் செய்தனர்.
இதனையடுத்து மாநகர சபைக்கு முன்பாக அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அவ் ஆர்ப்பாட்டத்தில் மாநகர சபையின் மேயர், பிரதி மேயர் க.சத்தியசீலன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் சிலர், ஐக்கிய தேசிய கட்சியின் சில உறுப்பினர்கள் புறக்கணித்திருந்தனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மாநகர சபையின் ஆணையாளர் கே.தயாபரன், “மாநகரச பையின் கட்டளை சட்டத்தை மீறி சபையின் மேயர் உட்பட உறுப்பினர்கள் செயற்பட முடியாது” என்றார்.

1 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025